பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியா பாரத்துக்காக வெளி நாடுகளில் ஸஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸ்மயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு, அவர் களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரணை செய்வது வழக்கம். அதனின்றும் விக்ரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக் கொண்டார். யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் பொதுவாகிய 'பழைய ஏற்பாடு" என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அ ங் கீ கா ரம் செய்துகொண்டார் கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்: கடவுளின் அவதாரமாக ஒப்புக் கொள்ள வில்லை. விக்ரஹங்களிடத்தே க ட வு ளை க் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்த னென்றும் போற்றலாமேயல்லாது, மனித வடிவத்தில் ஸாrாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினர் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு : இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது: அண்டங்களாக இருந்து சுழன்ருேடுகிறது: காற்ருகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக் கிறது! ஸ்தூல அணுக்களும் ஸஅகஷ்ம அணுக்களும் ஸ்தா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத் துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்திலிருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே