பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

819 கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னர். 19. கவராத்திரி (குறிப்பு : இத்தலைப்புடன் 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி இரண்டு கட்டுரை கள் வெளியாகி உள்ளன. இக்கட்டுரை அந்த இரண்டில் எது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அநேமாக அக்டோபர் மாதத்தில் வெளியாகி உள்ளதால் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரை என்றே கருதவேண்டும். ஆனல் திட்ட வட்ட மாகக் கூறமுடியாது. பாரதியார் தமது இஷ்ட தெய்வமான பராசக்தியைக் குறித்து எவ்வாறு நவராத்திரியைப் பூஜை செய்கிருேம் என்று சொல்லுகிருர், ல கூடி மி எ ன் று ம், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற மூன்று தொழில் நடந்துவது பராசக்தியே என்கிருர் பாரதியார்.) ஒன்பதிரவு பராசக்தியை பூஜை செய்கிருேம். லக்ஷ்மி யென்றும், ஸரஸ்வதியென்றும், பார்வதியென்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது. ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிருேம்.