பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிருர்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய் கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு. மஹாளய அமாவாஸ்யை கழிந்தது. இருளும் ஒளியும் மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு; மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலேதான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு: இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு: இரவாவது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல்; இரவு லயம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது. சக்தி-நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ர மாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். 'உலகத்தார் இந்த பராசக்தியை நல்ல மழையருள்புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும்' என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்த பூஜை மிகவும் கோலாஹலமாக நடத்தப்போவதாகப் பத் தி ரி ைக யி ல் ஒரு தந்தி போட்டிருந்தது. ஸஹஜமான விசேஷம். தேச முழுதும் (இப்படி) நடப்பது (நல்லது சங்கர மடத்திலும் நடக்கிறது. (எனக்கு) ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப்பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம். வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனல், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மை