பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கூறிய மூவகை நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம் இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர். கடைசி ஒன்பதாம் நாள் மரத்திரமேனும் விரதம் காக்க வேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது. சக்தியால் உலகம் வாழ்கிறது: நாம் வாழ்வை விரும்புகிருேம்: ஆதலால் காம் சக்தியை வேண்டுகிருேம்.