பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அசையா நெஞ்சம் அருள்வாய்: உயிரெலாம் இன்புற் றிருக்க வேண்டி, தின் னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. சொல்லினுக் கரியய்ைச் சூழ்ச்சிக் கரியய்ைப் பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை, உள்ளுயி ராகி உலகங் காக்கும் சக்தியே தானுந் தனிச்சுடர்ப் பொருளை, சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி, ஒமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி, சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று யார்க்கும் எளியணுய், யார்க்கும் வலியனய், யார்க்கும் அன்பளுய், யார்க்கும் இனியனய் வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீயிதை ஆழ்ந்து கருதி ஆய்தாய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே, நின்ன லியன்ற துணைபுரி வாயேல், பொன்னல் உனக்கொரு கோயில் புனைவேன்; மனமே! என நீ வாழ்வித் திடுவாய்! வீணே யுழலுதல் வேண்டா, சக்தி குமாரன் சரண்புகழ் வாயே! நிழலினும் வெயிலினும் நேர்ந்த நற்றுணையாய்த் தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து, மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப் பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான், உள்ளத் தோங்க நோக்குறும் விழியும், 3.