பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்; வேண்டா தனத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. விருத்தம் மேன்மைப் படுவாய் மேைம! கேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும், பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயனில்லை; யான் முன் உரைத்தேன் கோடிமுறை, இன்னுங் கோடிமுறை சொல்வேன், ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே. அகவல் அச்ச மில்லை அமுங்குத லில்லை; நடுங்குத லில்லை நாணுத லில்லை; பாவ மில்லை பதுங்குத லில்லை; ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்: அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்: கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்; யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்: எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்; வான முண்டு, மாரி யுண்டு; ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே: தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,