பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும், களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றுமிங் குளவாம்! சலித்திடாய்; ஏழை நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னே! தஞ்ச முண்டு சொன்னேன், செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. வெண்பா நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்-உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்! சிந்தையே, இம்மூன்றும் செய். அகவல் எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே! பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்; யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல் செவ்விய நெறி அதிற் சிவநிலை பெறலாம்; பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்: மங்கள குணபதி, மணக்குளக் கணபதி! நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்: அகல்விழி உமையாள் ஆசை மகனே! நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும், உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி ஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய சுடர்தரு மதியோடு துயரின்றி வாழ்தலும் நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன் காத்தருள் புரிக கற்பக விநாயகா! காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம்