பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆறு துணை (குறிப்பு :-ஹிந்து மதம் சிதறுண்டு கிடந்தது. சுமார் 92-க்கும் மேற்பட்ட பிரிவுகளாக அலங்கோலமாகக் கிடந்தது. . இவற்றையெல்லாம் ஒர் ஐக்கியப்படுத்தி காணபத்யம், கெளமாரம், சாக்தம், வைணவம், சைவம் செளரம் என ஆறு மதங்களாக நிறுவியவர் ஆதிசங்கரர் ஆவர். இதேைலயே அவருக்கு ஷண்மத ஸ்தாபகர் என்னும் பெயர் உண்டாயிற்று. ஆதிசங்கரர் இல்லா விட்டால் இவ்வகையான வலிமை வாய்ந்த ஹிந்து மதத்தை உண்டாக்கியிருக்க முடியாது. பாரதியார், புதுவகையாக ஆறு துணைகளை இக் கவிதையிலே நாடுகின்ருர். கணபதிராயன், பராசக்தி, வடிவேலன், கலைமகள், கண்ணன், திருமகள் என்பன இந்த ஆறு துணைகளாகும். இது ஒர் அற்புதமான கவிதையாகும். 'வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்; சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல்.’ என்ற அக்ஷர லக்ஷம் பொருந்திய இணையற்ற வரிகளைப் பாரதியார் அளித்திருக்கிரு.ர். முருகன், கண்ணன், பராசக்தி-அவருக்குப் பிடித்த மான தெய்வங்களாகும். ஒம் சக்தி என்பதே புகழ்பெற்ற தாரக மந்திரமாகி விட்டது. பாரதியாருக்கு எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான்; ஆனால் இஷ்ட தெய்வம்