பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 துள்ளது. இதற்கு இணை இதுவேதான். தமிழின் அழகு, தமிழின் வலிமை எல்லாம் கும்மாளமிட்டுக் கொண்டு இந்தக் கவிதை அமரத்துவம் வாய்ந்ததாகப் பாரதியார் தம் உள்ளத்திலே தோன்றியதை அப்படியே எழுதி விட்டார். இதற்கு வரிக்குவரி, சொல்லுக்குச் சொல், தங்கத் தேங்காயை உருட்டலாம். படித்துப் படித்து மகிழுங்கள்.) வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித் தாடுங் காளீ! சாமுண் டீ கங் காளீ! அன்னை! அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. I ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் ருகப் - பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக . அங்கே முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே முடியா நடனம் புரிவாய், அடுதி சொரிவாய்! ஆன்னை! அன்னே! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 2 பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய. அங்கே ஊழாம் பேய்தான் "ஓஹோஹோ வென்றலைய - வெறித் துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்! அன்னை! அன்னே! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 3. சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச் சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே எத்திக் கினிலும் நின்விழியனல் போய் எட்டித் - தானே எரியுங் கோலங் கண்டே சாகும் காலம் பா. க.-2