பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மஹா சக்தி (குறிப்பு: எல்லாத் தெய்வங்களும் ஒன்றே. "உண்மை ஒன்றேதான்; ஞானிகள் அதற்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற வேதவாக்கைப் பாரதியார் முற்றிலும் நம்புகின்றவர். என்ருலும், இஷ்டதெய்வம் ஒன்றிருக்க வேண்டு மல்லவா? இஷ்டதெய்வத்தை, இந்த உண்மையை நம்பி வழிபடுகின்றது தவறில்லை. எல்லா மதமும் ஒன்றேதான்: வீனகச் சண்டைபோடுவது தவறு என்று உலகிற்குக் காட் டவந்த இராமகிருஷ்ண பரமஹம்சரும், தமக்கு இஷ்டதெய்வமான காளியை வழிபட்டு வந்தார். சமரச சன்மார்க்கத்தை நி லை நாட் ட வந்த அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரும், ஜோதியை வழிபட்டு வந்தார். ஆகவே இஷ்ட தெய்வ வழிபாட்டை யாரும் தவறு சொல்லமாட்டார்கள். உண்மையில், ஹிந்துக்களுக்குப் பல தெய்வங்கள் உண்டு. யார்யாருக்கு எது பிடிக்கிறதோ அதை இஷ்ட தெய்வமாக வணங்கலாம். ஹிந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிருர்கள் என்று குறை கூறுவதுண்டு. குறைகூறுவோம், இந்த உண்மையை அறிய மாட்டாதவர்களாவார்கள். பிற்காலத் தில், தம்தம் கடவுளை உயர்ந்தவர் என்று அறியாமை யினல் புராணங்கள் எழுதிவைத்து விட்டார்கள். அதை நம்பிப் பல சமயப் பூசல்கள் ஏற்பட்டுள்ளன. இது மூடத் தனமாகும். எல்லாத் தெய்வமும் ஒன்றே என்பதை மறந்துவிட்டு, விஷ்ணு உயர்வென்றும் சிவன் உயர் வென்றும் புராணங்களை நம்பி மூடத்தனமான பல சண்டைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது வரலாறு கூறும்