பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£4 10. தொழிற் பெருமை 11. தெய்வ பக்தி-இதுதான் பூரீகாந்தி செய்த பிரசங்கத்தின் ஸாராம்சம். தராசு சொல்லலாயிற்று :-பூரீமான் காந்தி நல்ல மனுஷர். சொல்லுகிற ஸத்யவிரதம், அஹிம்ஸை, உடைமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள்-இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும்."......காந்தி பதினெரு விரதம் சொன்னர். நான் பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில் -'எப்பாடுபட்டும் பொருள்தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலை பெறு. இப்பன்னிரண்டா வது விரதத்தைத் தேசமுழுதும் அனுஷ்டிக்க வேண்டும். பாரதியார் திருக்காதல்', 'திருவேட்கை', 'திருமகள் துதி”, “திருமகளைச் சரண் புகுதல்', 'மூன்று காதல்", என்னும் கவிதையில் உள்ள லக்ஷ்மி காதல்’ என்ற கவிதை களையும் இயற்றியுள்ளார்.) மாதவன் சக்தியினைச் - செய்ய மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்: போதுமிவ் வறுமையெலாம் - எந்தப் போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே வேதனைப் படுமனமும் - உயர் வேதமும் வெறுப்புறச் சோர்மதியும் வாதனை பொறுக்கவில்லை - அன்னை மாமக ளடியிணை சரண் புகுவோம். I கீழ்களின் அவமதிப்பும் - தொழில் கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே மூழ்கிய விளக்கினைப்போல் - செய்யும் முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,