பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) ஊணர் தேசம் யவனர் தந் தேசம் உதய ஞாயிற் ருெளிபெறு நாடு; சேன கன்றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பார சிகப்பழந் தேசம் தோன லத்த யிருக்கம் மிசிரம் சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர், ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்! ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர், மான மற்று விலங்குக ளொப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா, புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் (வெள்ளைத்) இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதி ஞாயிரம் நாட்டல்,