பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 10. நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்! நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளிர்! ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் வாணி பூசைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர் (வெள்ளைத்) 14. மூன்று காதல் (குறிப்பு : பாரதியார் ஒரு நவராத்திரியின்போது திருமதி யதுகிரியம்மாளின் விருப்பத்திற்கிணங்க இப் பாடலைப் பாடினர். சரஸ்வதி காதல், லக்ஷ்மி காதல், காளி காதல் என்பன இந்த மூன்று பாடல்கள் ஆகும். ஒவ்வொன்றையும் வெவ்வேறு ராகங்களில் அமைத்துப் பாடியிருக்கின்ருர் பாரதியார். கலைமகளிடம் காதல் கொண்டது பற்றியும், செல்வத்துக்குரியவளான லக்ஷமி யிடத்தில் காதல் கொண்டதையும், முதல் இரண்டு பாடல் களில் அழகாக வெளியிடுகின்ருர்.