பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிந்தை திறைகொடுத்தேன் . அவள் செந்திரு வென்று பெயர்சொல்லி ள்ை, மற்றும் அந்தத் தின முதலா - நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! புன்னகை செய்திடுவாள் - அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சற்றென் முன்னின்று பார்த்திடுவாள் - அந்த மோகத்தி லேதல சுற்றிடுங் காண்; பின்னர் என்ன பிழைகள் கண்டோ - அவள் என்னைப் புறக்கணித் தேகிடு வாள். அங்கு சின்னமும் பின்னமுமா - மனஞ் சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! காட்டு வழிகளிலே - மலைக் காட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே, பல நாட்டுப் புறங்களிலே - நகர் நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில வேட்டுவர் சார்பினிலே - சில வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும், மீட்டு மவள் வருவாள் - கண்ட விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா! மூன்ருவது-காளி காதல் பின்னெர் இராவினிலே - கரும் பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு, கன்னி வடிவமென்றே - களி கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா! - இவள் ஆதி பராசக்தி தேவி யடா! - இவள் இன்னருள் வேண்டுமடா - பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!