பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv மோகம். ஆங்கிலமே கோலை ஏந்தி ஆட்சி புரிந்தது. மக்கள் தனியே பேசும்போதுகூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாக எண்ணினர்கள். டமில் பேச நாணினர்கள். இந்த அறியாமை இருள் வெள்ளத்தினிடையே அமுது கொப்புளிக்கும் சந்திரன் ஒருவன் தோன்றினன். கால வெளியின் தூரத்தில் இருக்கும் பொருளையும் காட்டும் ஆற்றலுள்ள அமுத கிரணங்களை வீசினன். அதில் தீயின் வெம்மையும் தேனின் சுவையும் இணைந்திருந்தன. பொய்ம்மை யையும் அச்சத்தையும் சாடுவதில் அந்தச் சந்திரனுடைய கதிர்களில் தீக்கொழுந்துகள் மூண்டன. ஞானத்தையும் அன்பையும் வீசுகையில் அதன் கதிர்கள் தண்ணென்று இருந்தன. வீரம் ஒருபக்கம், ஈரம் ஒருபக்கம்; துயரம் ஒரு பக்கம், துணிவு ஒருபக்கம். இவ்வாறு தண்டமிழ் வானில் தோன்றிய சந்திரன்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவருடைய கவிதைகள் தமிழ் நாட்டில் ஒரு புதிய யுகத்தையே தோற்றுவித்தன. புழுவைப் புலியாக்கவும், துரும்பை இரும்பாக்கவும் வலிமையுடைய வீரசக்தி அவற்றில் இருந்தன. பாரததேவியின் பெருமையை விளக்கும் பேரொளியை அவை விரித்தன. வேதநெறியையும் தமிழினிமையையும் அவை புகழ்ந்து பாராட்டின. இந்த நாட்டின் கலைகளுக்கும், வாழ்க்கைக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது கடவுள் உணர்வு. எத்தனை கல்வி கற்ருலும், எவ்வளவு மகத்தான காரியங்களைச் சாதித்தாலும், கடவுள் உணர்வு இல்லாவிட்டால் அவை அத்தனையும் வீண் என்பது இந்த நாட்டின் கொள்கை. நெட்டியால் வண்ண விசித்திரங்களுடன் ஒரு வீட்டைக் கட்டலாம்; அதைப் பார்த்து மகிழலாமேயன்றி அதில் புகுந்து வாழமுடியாது. அதற்கு அஸ்திவாரம் இல்லை. சுவர்களுக்கு உரம் இல்லை. கவர்ச்சியாகத் தோன்றும் நூல்கள் அந்த நெட்டி வீடுகளைப் போன்றவையே. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர் பாரதியார். கடவுள் உணர்விலே அவர் சிறந்து நின்றவர். மனிதன் நுகரும்