பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கடலில் 1915, ஜூலை மாதம், 1-ஆம் தேதியில் இந்த உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது என்பது, கீழ்க்கண்ட பாரதி வாக்கியத்தால் தெளிவாகும். 'மகனே, உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்கவேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன்-அது யந்திரம். நீ யந்திரி." 'வயிறு வேதனை செய்கிறது, உஷ்ண மிகுதியால் நோயற்றிருப்பதற்கு சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லை யென்று மனதை உறுதி செய். மனம் போல உடல்." பாரதியார் மேலும் எழுதுகிருர்: "இன்பமில்லையா? பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள் தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களை யெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? * முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாதக் காலம் இரவும் பகலு மாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை-இருவருக்கும் உறக்கம் நேரே வரவில்லை-இருவருக்கும். எப்போதும் சஞ்சலம். பயம், பயம், பயம்! சக்தி, உன்னை நம்பித் தானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றிய்ை. உன்னை வாழ்த்துகிறேன். கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்-தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! பராசக்தி, ஓயாமல்