பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லையில்லாத படி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந் திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகின்றேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும். தாயே-என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் carró)Gaugér” பாரதியார், அனேகமாக இதை உணர்ச்சி வசப்பட்டுத் தான் வரங்கேட்டிருக்க வேண்டும். வரங்கேட்பதிலும் பாரதியாரின் தனித்தன்மை வெளிப்படுகின்றது. அவர் வரங்கொடு, வரங்கொடு என்று கெஞ்சவில்லை. 'மலர்த்தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அது தாரா யெனிலுயிரைத் தீராய்' என்றும், "பலநாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம் நாடும் பொருளடைதற் கன்ருே?" என்றும் மிடுக்கோடு வரம் கேட்கின்ருர். மேலும் பாரதியார் தமக்குத் தனிப்பட்ட பணி யொன்று உண்டு என்பதையும் தெளிவாகக் காண்கிரு.ர். தமிழ்நாடு, தமிழ் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்னும்