பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை அச்சம் போயொழிதல்வேண்டும் - பல பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப் பார்த்தன் கண்ணனிவர் நேரா - என உய்யக் கொண்டருள வேண்டும் - அடி உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை வாழி! நின்னதருள் வாழி! 10 ஒம் காளி! வலிய சாமுண்டி! ஓங்காரத் தலைவி! என் இராணி! 19. பகைவனுக்கருள்வாய் (குறிப்பு : பாரதியார் இயல்பாகவே இரக்க நெஞ்சம் படைத்தவர். பாண்டிச்சேரியில் உள்ளபோது முதல் உலக மஹாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. "அதில் பல வெள்ளையர்கள் மடிந்து போவதற்காக நான் கண்ணிரி சிந்தியதுண்டு. இத்தனைக்கும் நான் ஸ்வதேசியத்தில் கொஞ்சம் அழுத்தமானவன்" என்று பாரதியாரே எழுதி யிருக்கிரு.ர். ஆகவே பகைவனுக்கருள்வாய் என்ற கவிதை இயல்பாகவே மிக அழகாக எழுந்திருக்கின்றது. அவர் காட்டியுள்ள சிறந்த எடுத்துக்காட்டாக இக் கவிதை உருவாகியிருக்கின்றது. தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போ ற் றி டு வாய்' என்று இவ்வாருன பலபிரயோகங்கள் அழகாக விழுந்திருக் கின்றன. காந்தி அடிகள் இக் கவிதையின் பொருளைத் தெரிந்து கொண்டிருப்பாராயின் மிகவும் மகிழ்ச்சியடைந் திருப்பார்.)