பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நில்லாது சுழன்ருேட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலுந் தொடரொளுத பெருஞ் சோதி! (அல்லா, அல்லா, அல்லா!) 2. கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும், பொல்லாதவ ராயினும் தவமில் லாதவராயினும், நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும் எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன் (அல்லா, அல்லா, அல்லா!) 21. சாகாவரம் (குறிப்பு : இது பாரதியார் சாகாமல் இருப்பதற்குச் செய்யும் முயற்சிகளில் ஒன்ருகும் என்று கூறலாம். கடவுளே எந்த வடிவத்திலும் வணங்கலாம். இதில் சற்றும் மாறுபாடு இல்லை என்பதற்கு ராமனைத் தொழுவது ஒர் எடுத்துக்காட்டு. மற்றபடி இதில் தனிச்சிறப்பு இல்லை. தமது இஷ்ட தெய்வமாகிய பராசக்தியை தொழுவது போல, இதில் அழகிய சொற்கள் இல்லையென்பதும் ஆராய்க.) பல்லவி சாகா வர மருள்வாய், ராமா சதுர் மறை நாதா-ஸ்ரோஜ பாதா! சரணங்கள் 1. ஆகாசந் தி கால் நீர் மண் ஆத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்