பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 என்று அதட்டிச் சோர்வைப் போக்குகின்ருன் கண்ணன். பகவத் கீதையின் வடித்தெடுக்கப்பட்ட அழகிய இன்பக் கவிதைகளைப் பாரதியார் இதில் நமக்குத் தந்திருக்கின்ருரீ.) ஓர் கனவு கனவென்ன கனவே - என்றன் கண்துயி லாது நனவினிலே யுற்ற கானகங் கண்டேன் - அடா கானகங் கண்டேன் - உச்சி வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். பொற்றிருக் குன்றம் . அங்கொர் பொற்றிருக் குன்றம் - அதைச் சுற்றியிருக்கும் சுனைகளும் பொய்கையும். புத்த தரிசனம் குன்றத்தின் மீதே - அந்தக் குன்றத்தின் மீதே - தனி நின்றதொர் ஆல நெடுமரங் கண்டேன். பொன்மரத் தின் கீழ் - அந்தப் பொன்மரத் தின்கீழ் - வெறுஞ் சின்மய மானதோர் தேவன் இருந்தனன். புத்த பகவன் - எங்கள் புத்த பகவன் - அவன் சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். காந்தியைப் பார்த்தேன். அவன் காந்தியைப் பார்த்தேன் - உப சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன) (கன) (கன) (கன) (கன) (கன) (கன)