பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 24. வாடி, நில்லாதே; - மனம் வாடி, நில்லாதே; - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை) 25. ஒன்றுள துண்மை - என்றும் ஒன்றுள துண்மை - அதைக் கொன்றிடவொனது குறைத்த லொண்ணுது. (வில்லிணை) 26. துன்பமு மில்லை - கொடுந் துன்பமு மில்லை - அதில் இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. 27. படைகளுந் தீண்டா - அதைப் படைகளுந் தீண்டா - அனல் சுடவுமொண் ணுது புனல்நனை யாது. (வில்லினை) 28. செய்தலுன் கடனே - அறஞ் செய்தலுன் கடனே - அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை) 24. காலனுக்கு உரைத்தல் (குறிப்பு : பாண்டிச்சேரியில் இருந்தபோது பாரதியார் சாகாதிருக்க வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட் டிருக்கிரு.ர். இதற்காகப் பலநாள் மெளன விரதமும் அனுஷ்டித்திருக்கிருர். குள்ளச்சாமி போன்ற சாமியார் களின் தூண்டுதலாலே, இந்த முயற்சியை மேற்கொண் டாரோ என்னவோ அறியோம். ஆனல் ஒரு புதிய வழியைக் காணும் போது, உற்சாகமாக அந்த