பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வழியைக் கடைப்பிடிப்பது கவிஞரது இயல்பு. யார் தடுத்தாலும் கேட்கமாட்டார். சமூக சீர்திருத்தம் செய் வதற்கு எவ்வாறு துடித்தாரோ, அவ்வாறே, ஒரு புதுவழி யைக் காணும்போதும், அதிலே பாரதியார் மிக உற்சாக மாக ஈடுபடுவார். சாகாதிருக்கலாம் என்று பாரதியார் முழுமனதோடு நம்பினர். இந்த நம்பிக்கை இறுதிவரை யிலும் அவரை விடவில்லை. 1921-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ந்தேதி எழுதிய என் ஈரோடு யாத்திரை' என்ற கட்டுரையிலும் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்து கின்ருர். கருங்கல் பாளையம் என்ற ஈரோட்டிற்கு அண்மையில் உள்ள ஊரிலே ஒரு வாசகசாலை உண்டு. அதன் முக்கியஸ்தராக திரு. தங்கப்பெருமாள் பிள்ளை என்ற தேசபக்தர் அப்பொழுது இருந்தார். ஆண்டுவிழா விற்குப் பல பெரியோர்களை அழைத்துக் கொண்டாடுவது பழக்கமாக இருந்தது. பாரதியாரின் பெருமையைக் கேள்விப்பட்ட திரு. தங்கப்பெருமாள் பிள்ளை, ஆண்டுவிழாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிருர். அதன் காரணமாகவே இக் கட்டுரை எழுந்திருக்கிறது. பாரதியார் கூறுகின்ருர் : "எனக்கு ஒரு விஷயந்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடு மென்ற விஷயம். "ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வப் பக்தியும், மன் மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன் கைக் கொண்டிருப்பாயிைன், அவன் இந்த உலகத்திலேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவய்ை. எப்பொழுதும் மகிழ்ச்சி கொண்