பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை. இந்தக் கொள்கையை நான் வேத புராண சாஸ்த்ரங்கள் இதர மதநூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், பூரீமான் ஜகதீஸ் சந்திரவஸ்"வின் முடிவுகள் என்னும் ஆதா ரங்களாலே ருஜூப்படுத்தினேன். அங்குள்ள பெரிய வித்வான்கள் எல்லோரும் கூடி, என்னுடைய தக்கத்தில் யாதொரு பழுதுமில்லை என்று அங்கீகாரஞ் செய்து கொண்டனர்." இந்த நம்பிக்கை பாரதியாருக்கு இறுதி மூச்சுவரை இருந்தது. ஆனல் பாரதியாருடைய நம்பிக்கை பொய் போனதில்லை. அவர் தமது இணையற்ற இலக்கியத்தால் என்றும் சிரஞ்சீவியாக வாழ்கிரு.ர். "காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன். என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்" என்று கூறியவர், என்றும் வாழ்வார். அவருடைய இலக்கியம் இன்னும் ஆண்டு செல்லச் செல்ல மேலும் மேலும் புகழ் பெற்று ஒங்குவது திண்ணம்.) பல்லவி காலா ! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் - அட (காலா) 1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் (துதிக்கிறேன் - ஆதி மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட (மூடனே? அட (காலா)