பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒவிரிந்திடும் ஆன்மாவே - இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை கூவுதல் கேளிரோ? 8 மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் - பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை காட்டவும் வல்லிரோ? 9 ஒன்று பிரமமுள துண்மை யஃதுன் உணர்வெனும் வேதமெல்லாம் - என்றும் ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. 10 28. பரசிவ வெள்ளம் (குறிப்பு : "காவித்துணி வேண்டாம். கற்றைச் சடை முதலிய வேடங்கள் வேண்டாம். என் உள்ளத்துக் குள்ளே ஈசன் நிரம்பியிருக்கிருன் என்ற மெய்யுணர்வே போதும்' என்பது பாரதியாரின் தெளிந்த கருத்தாகும். பூரீராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷிகள், ராம லிங்க வள்ளலார் போன்ற மஹான்களின் வாழ்க்கையில் இதைத் தெளிவாகக் காணலாம். திருவண்ணுமலை ஜோதியாக விளங்கும் ரமண மஹரிஷிகள் காவியுடுத்த வில்லை; வேறு எவ்வித வேடமும் புனைந்து கொள்ள வில்லை; அவருக்குக் கோவணமே ஆடை இருந் தாலும், எங்கும் நிறைந்திருந்த பரப்ரம்ம வடிவ மாகவே அந்த ஞானிகள் அனைத்தையும் கண்டார். ஆகவே வேடம் முக்கியமல்ல.)