பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vil அவருக்குத் தொழிலும் உபாசனைதான்; பராசக்தி தொழில் செய்வாரிடமும் விளங்குகிருள். ஞானியரின் மாசுமறு வற்ற உள்ளத்திலே கொலு வீற்றிருப்பவள். கைவருந்தி உழைப்பவர் தெய்வமாகவும் விளங்குகிருள். உழைப்பில்லாத சோம்பேறியை வெறுப்பவர் அவர்: சோம்பலே பெரிய நோய் என்பது அவர் கொள்கை. பல சாமியார்களைக் கண்டு பாரதியார் பேசுகிருர் அவர்கள் கூறிய உண்மைகளை உணர்ந்து மகிழ்கிரு.ர். குள்ளச் சாமியின் நெடிய வடிவத்தைக் கண்டு வியக்கிரு.ர். கோவிந்த சாமியைப் போற்றிப் புகழ்கிரு.ர். அச்சமும் பொய்ம்மையும் போக்கினல் அதுவே மெய்ஞ்ஞானம் என்பது அவர் சித்தாந்தம்; 'பயமெனும் பேய்தனை அடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்" என்று ஜய பேரிகை கொட்டுகிரு.ர். தெய்வத்தை எங்கும் பார்க்கும் அகண்ட தரிசனம் அவருக்குக் கிடைக்கிறது. "காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாம் அன்றி-வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்' என்ற பாடலில் அத்துவித நிலையைக் காட்டுகிரு.ர். தன்னை யன்றி வேருென்று இருப்பதாகக் கொண்டால்தான் அச்சம் உண்டாகும். அத்வைத உணர்விலே அச்சத்துக்கு இடம் இல்லை என்பது அத்வைத சித்தாந்தம். இதைக் கவிதையென்னும் யோகத்தில் கைவந்த பாரதியார் உணர்கிரு.ர். "வானிற் பறக்கும் புள்ளெலாம் நான்' என்று பெருமிதத்தோடு பாடுகிரு.ர். தின்னவரும் புலியிலும் பராசக்தியைக் காணுகிரு.ர். அவருடைய கவிதை விசுவரூபம் எடுத்து, அகில உலகத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறது.