பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6Ᏸ உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானகும் வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் (வேதியரே. 1 காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. 2 எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய் 3 வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். 4. துல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற் சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானகி, 5 தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. 6 எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. 7 வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. 8 காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு [ளாய் மாண்பார்ந் திருக்கும், வகுத்துரைக்க வொண்ணுதே. 9 எல்லாந் தானகி யிருந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. 10 மற்றிதனைக் கண்டார் மலமற்ருர் துன்பமற்ருர்; பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே. 11 இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. 12 வேண்டுவ வெலாம் பெறுவர் வேண்டா ரெதனையுமற் lண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. 13