பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. 14 வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ளமிசைத் தானமுத ஆற்ருய்ப் பொழியுமடா! I5 யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! I6 எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின் பத் தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! 17 எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்ருற் (போதுமடா! 18 யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் ருேதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! I9 காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா: பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே 20 சாத்திரங்கள் வேண்டா அதுமறைக ளேதுமில்லை: தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்ருற் (போதுமடா: 21 தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் (போதுமடா 22 சந்ததமு மெங்கு மெல்லாந் தானகி நின்றசிவம். வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னற் (போதுமடா! 23 நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா! 24