பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சோர்வுகள் போகும், - பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும், நற் பார்வைகள் தோன்றும் - மிடிப் பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும், - பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும் - பிணி தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி) கல்வி வளரும், . பல காரியங் கையுறும், வீரிய மோங்கிடும், அல்ல லொழியும், - நல்ல ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும், சொல்லுவ தெல்லாம் - மறைச் சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய் வல்லமை தோன்றும், - தெய்வ வாழ்க்கையுற்றேயிங்கு வாழ்ந்திடலாம் உண்மை. (பக்தி) சோம்ப லழியும் - உடல் சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங் கூம்புத லின்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும், வீம்புகள் போகும் - நல்ல மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும், பொய்ப் பாம்பு மடியும் - மெய்ப் பரம்வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி) சந்ததி வாழும் - வெறுஞ் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், இந்தப் புவிக்கே - இங்கொர் ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்