பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கந்த மலர்த்தாள் - துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என் சிந்தை யறிந்தே - அருள் செய்திடவேண்டும் என்ருல் அருளெய்திடும். (பக்தி) 33. சென்றது மீளாது (குறிப்பு : பல வேளைகளில் இப்படிச் செய்திருக்க வேண்டும் அல்லது அப்படிச் செய்திருக்கவேண்டும், செய் திருந்தால் வாழ்க்கை மிகவும் மேம்பட்டிருக்கும் என்று சதா சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள் பல பேர். அதற்கு வருத்தப்படவும் செய்வார்கள். இவ்வாறு செய்வதுதான் பலருடைய இயல்பாகும். சென்றது மீளாது மூடரே, நீர் சென்றதையே சிந்தை செய்து கவலையின் குழியில் வீழ்ந்து குமையாதீர் என்று ஒரேயடியாக அடித்து விடுகிருர் பாரதியார். இன்று புதிதாகப் பிறந்தோம் என்று எண்ணி இன்புற் றிருந்து வாழ்வீர் என்று தெளிவாகச் சொல்லி விடுகின்ருர் நமது கவிஞர். பலருக்கு இந்த நற்போதனை அருமருந்தாகும். பாரதி அறுபத்தாறில் இக் கருத்தைக் கொண்ட சொற்கள் மீண்டும் வருகின்றன.) சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா,