பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாரி எங்கள் முத்து மாரி என்று அவர் கூறும்போது மெய் சிலிர்க்குமாம். எல்லா தெய்வங்களும் ஒன்று என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. பாரதி அன்பராகிய திரு ர. அ. பத்மநாபன் அவர்கள் இந்தக் கோயிலைப் பற்றி ஒரு போட்டோ எ டு த் து த் தமது அருமையான சித்திரபாரதி என்னும் நூலில் வெளியிட்டிருக்கிறார்.) உலகத்து நாயகியே! - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! உன்பாதம் சரண் புகுந்தோம், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கலகத் தரக்கர்பலர், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி ! பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! நின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! I துணிவெளுக்க மண்ணுண்டு, ... எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! தோல்வெளுக்கச் சாம்பலுண்டு, எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரிi மனம் வெளுக்க வழியில்லை, - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!