பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பிணிகளுக்கு மாற்றுண்டு, . எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பேதைமைக்கு மாற்றில்லை, . எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அணிகளுக்கொ ரெல்லையில்லாய் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! 2 36. அச்சமில்லை (பண்டாரப் பாட்டு) (குறிப்பு : விடுதலைப் போராட்டத்தின்போது புகழ் பெற்ற பாரதியார் பாடல்களில் இதுவும் ஒன்று. அச்ச மில்லை என்று உணர்ச்சியோடு பாடுங்காலத்தில் உண்மை யாகவே அச்சம் மறைந்துவிட்டது என்று நாம் எளிதில் உணரலாம். போலீஸ் குறுந்தடி ஒரு பக்கம்: எந்த நேரத் திலே அதை வீசுவார்களோ தெரியாது. மண்டைகள் உடைபடும் ரத்தவெள்ளம் பெருக்கோடும். ஆனல் உச்சி மீது வானிடிந்து லீழுகின்ற போதிலும் என்று பாடி விட்டால் அச்சம் அகன்றுவிடும். உயிரைத் துச்சமாக மதித்து அஹிம்சைப் போரை நடத்தத் தொண்டர்கள் முன்வருவார்கள். அவ்வளவு காம்பீர்யம் நிறைந்தது இப் பாடல். பண்டாரப்பாட்டு என்று குறிப்பிட்டிருந்த போதிலும், அரசியல் போராட்டங்களிலே மிகச் சிறந்த துணிச்சல் தந்தது இப்பாடல்தான்.) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்துளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,