பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் துாறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட (போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! I கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயிலே கொணர்ந்து நண்பருட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ விையைந்த வேற்படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பு தில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லே அச்சமில்லை அக்சமென்ப தில்லையே. 2 37. ஜெயபேரிகை (குறிப்பு : இதுவும் ஒரு புகழ் பெற்ற பாடலாகும். பாரதியார் பாடும்போது கேட்டவர்கள் சிம்மகர்ஜனை போன்று ஒலிப்பதைக் கேட்டிருப்பார்கள். ஞானப் பாடல்கள் என்ற தலைப்பில் வந்திருந்தாலும், அரசியல் போராட்டங்களிலே துணிச்சல் கொடுப்பதற்காகவே எழுதப்பட்டது இப்பாடல். 'காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம்' என்று பாடும்பொழுது பாரதியாரது ஒருமைப்பாட்டு உணர்ச்சி களை வெளிப்படுத்தியதை நாம் உணர்வோம். தாய்மொழி தமிழாக இல்லாவிட்டாலும், தமிழைச் சரியாகப் புரிந்து