பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காயிலே புளிப்பதென்னே, கண்ண பெருமானே? - நீ கணியிலே இனிப்பதென்னே, கண்ண பெருமானே? நோயிலே படுப்பதென்னே, கண்ண பெருமானே? - நீ நோன்பிலே உயிர்ப்ப தென்னே, கண்ண பெருமானே? காற்றிலே குளிர்ந்ததென்னே, கண்ண பெருமானே? - நீ கனலிலே சுடுவதென்னே, கண்ண பெருமானே? சேற்றிலே குழம்பலென்னே, கண்ண பெருமானே? - நீ திக்கிலே தெளிந்ததென்னே, கண்ண பெருமானே? ஏற்றிநின்னைத் தொழுவதென்னே, கண்ண பெருமானே? எளியர் தம்மைக் காப்பதென்னே, கண்ண பெருமானே? போற்றினுேரைக் காப்பதென்னே, கண்ணபெருமானே? - நீ பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே, கண்ண பெருமானே? 39. நந்தலாலா (குறிப்பு : இதுவும் சிறிய கவிதையாயினும், விலை மதிக்க முடியாத மாணிக்கம் ஆகும். நந்தலாலா கவிதையை நினைக்கும்போது, வடநாட்டுப் புகழ்பெற்ற ஒவியர் ஒருவர் தீட்டிய ஓவியம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு கண்ணன் முக அழகைப் பார்ப்பதற்காக ஆசை கொண்ட கோபியர் பெண்மணி ஒருத்தி வருகின்ருள். மாலை நேரம். இருள் கூடுகின்றது. உடனே விளக்கேற்றி வைக்க வேண்டுமல்லவா? அந்த காரணத்தைச் சொல்லிக் கொண்டு வருகின்ருள் ஒருத்தி. ஒருவர் வீட்டிலிருந்து மற்ருெருவர் வீட்டிற்கு விளக்கேற்றிக் கொண்டுபோவது இயல்பாக நடக்கும் வழக்கமாகும். அந்த வழக்கத்தைக்