பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ix

என்று முதன் முதலில் முழங்கியதும் பிரெஞ்சு நாடேயாகும். ஆகவே, அந்த எண்ணங்களை நிதானமாக நின்று ஆலோசிக்கப் பாண்டிச்சேரி வாசம் வழிவகுத்தது என்று கூறலாம்.

ஆனல் பாரதியாரின் மதிநுட்பமே இதற்கு முதற்காரண ழாக இருந்தது என்றும் திண்ணமாகக் கூறலாம். பாண்டிச்சேரி வில் உள்ள மக்கள் எல்லாருமே பெண்விடுதலை, சமூகசீர்திருத் தம் என்ற முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருந்ததாகச் சொல்ல முடியாது. 1905 ஆம் ஆண்டு நடந்த காசி காங்கி ரஸுக்கு பாரதியார் செல்லுகின்றார். அப்பொழுது சகோதரி நிவேதிதை அன்னையைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. சகோதரி நிவேதிதா தேவி ஒர் உணர்ச்சிமிக்க மேல்நாட்டு மாதராவார். அவர் தமது குருவாக சுவாமி விவேகானந்தரை ஏற்றுக்கொண்டு சேவை புரிந்தவர்.

பாரதியாரிடம் உனக்கு திருமணமாகிவிட்டதா?’ என்று கேட்கிறார் சகோதரி நிவேதிதா.

பாரதியார் தமக்குத் திருமணமாகிவிட்டதென்றும், ஒரு குழந்தையும் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்,

பிறகு ஏன் காங்கிரஸுக்கு மனைவியை அழைத்து வரவில்லை யென்று நிவேதிதை கடிந்து கொள்கிறார், இந்த நாட்டிலே பாதிப்பேர் பெண்கள் அறியாமையில் மூழ்கிக்கிடக்க உனக்கு ஸ்வராஜ்யம் வந்துவிடுமா? முதலில், அவர்கள் முன்னேற்றத் தையே நாடு இந்த நாடு அப்பொழுதுதான் விமோசனம் அடையும் என்று ஆவேசம் வந்தவர் போல அந்த மாது பேசு கின்றார். பாரதியாரின் வாழ்க்கை அன்னை நிவேதிதை சந்திப் புக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டது என்று சொல்லலாம். அவருடைய சந்திப்பிற்கு எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பது, அன்னை நிவேதிதைக்குத் தமது முதல் இரண்டு நூல் சுளேயும் அர்ப்பணம் செய்ததிலிருந்தே கண்டுகொள்ளலாம். எந்த ஆண்டில் பாரதியார் தமது முற்போக்கான சமூக ந்திருத்தங்களை வெளியிடுகின்றார் என்பதைக் கவனிக்கும் பாதுதான் அவர் பெருமை நன்கு வெளியாகும். 1914, 1915-ல் நமது புெண்களின் நிலைமை எவ்வாறு இருந்தது என்று சற்றுச்