பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87

ஜாது ஜனங்களும் முதலாளிகளும் மிகுந்த மதிப்புச் தலுத்தும்படி ஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற் ரடியாம். தம்முடைய கார்யத்தைச் செய்யவேண்டியதே pதாழிலாளியின் ஆத்மாவுக்கு ஈசனல் விதிக்கப்பட்ட துருஷார்த்தம்’ என்று முதலாளிகளில் பலர் நினைக்கிறார்கள். பந்திரங்களைப் போலவே இவர்கள் மனிதரையும் மதிக்கிறார் புள், பொதுவாக, ஏழைகளிடம் செல்வருக்கு உள்ள அவ நதிப்பு அளவிடும் தரம் அன்று. இவ்விதமான எண்ணம் இருமுடைய தேசத்திலும் செல்வர்களிடத்து மிகுதியாகக் ாணப்படுகின்றது. இவ் வெண்ணத்தை உடனே மாற்றி தொழிலாளிகளையும் மற்ற ஏழைகளையும் நாம் ஸாதாரண மனிதராக நடத்தவேண்டும் அதிலும், தொழிலாளிகளின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்தவேண்டும். இவ்வித மதிப்பினல் நாம் தொழிலாளிகளின் விஷயத்தில் என்னென்ன கடமைகள் செலுத்த நேரும் என்பதை பின்னெரு வியாசத்திற்பேசுகிறேன்.

17. ஹிந்துக்களின் கூட்டம்

(குறிப்பு : இந்தச் சுவையான கட்டுரை முக்கியமாக ஹிந்துக்களால் ஆழ்ந்து சிந்தித்தற் குரியது. இது ஏதோ கிறிஸ்து சமயத்தவர்களுக்கு விரோதமாக எழுதியது என்று எண்ணுவது பிழை. கிறிஸ்துவைப்பற்றிக் கவிதையிலும், வேறு கட்டுரைகளிலும் உயர்வாகப் பாரதியார் எழுதி யுள்ளார் என்பது வெளிப்படை. மேற்கோள் களாக பைபிளிலிருந்தும் பல பொருத்தமான இடங்களில் எடுத்துக் காட்டி யுள்ளார். “நானே கதவு என்று இயேசுநாதர் கூறியுள்ளதையும் இவர் ஆண்டுள்ளார்.