பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

ஜாதியைப்பற்றிய பாரதியார் கருத்து மேலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. அவர் இக் கட்டுரைகளுக்கு மேலே ஒரு படி செல்லுகின்றார். ஒருபடி என்பதுகூடத் தவறு. அதுவே சிகரப்படி. அதற்கு மேலே படியில்லை.

காலக் கண்ணுடி என்ற தலைப்பில்,1921 மார்ச் 15 ஆம் தேதி எழுதிய மித்திரன் கட்டுரையிலே அவர் கூறுவதாவது: “நான் ஜாதி பேதத்துக்கு நண்பனல்லேன். இந்தியர்களெல்லாரும், அல்லது ஹிந்துக்களெல்லாரும் ஒரே ஜாதியென்ற ஸாதாரண இங்கிலீஷ் படி ப் பா ளி க ளி ன் கொள்கையை நான் அனுஸ்ரிக்கவில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி ‘வஸ்'தைவ குடும்பம்’ என்ற பர்த்ருஹரியின் கொள்கையை தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து ஸ்மூஹங்களும் ஒரே குடும்பமென்ற (d) டார்வின் என்னும் ஆங்கில சாஸ்த்ரியின் கருத்தைப் பி ன் பற்று கி றே ன். எல்லா ஜீவர்களும் கடவுளுடைய அம்சமென்ற பகவத்கீதையின் பரமோபதேசத்தைக் கடைப்பிடித்து நிற்கிறேன். ஒரு பிராமணனை, ஒரு ஆங்கிலேயனே, ஒரு ஆட்டைக் கொல்லுதல் அல்லது அடிப்பதால் எய்தும் பாவம் ஒரே மாதிரி. உபசரிப்பதால் அல்லது வணங்குவதால் எய்தும் புண்யமும் ஒரே தன்மையுடையது. இஃதென் உண்மையான, யான் ஒழுக்கப்படுத்தி வருகிற கொள்கை.”

இதைவிட சொல்லுவதற்கு வேறு என்ன இருக்கிறது? “காக்கை குருவியெங்கள் ஜாதிநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று ஜயபேரிகை கொட்டிய மஹாகவி அல்லவா!)