பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108

புதிய அபாண்டமான அர்த்தங்கள் க ற்பித்துக்கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதல்ை ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது.

பிராமணன் யார்?

ஓர் உபநிஷத்தின் கருத்து

அஷ்டாதச உபநிஷத்துக்களிலே வஜ்ரஸூசிகை என்பதொன்று. ‘வஜ்ர ஸூசி என்றால் வயிர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ‘பிராமணன் யார்?’ என்பதை குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

“நான் பிராமணன், நீ குத்திரன்’ என்று சண்.ை போடும் குணமுடையவர்களுக்கெல்லாம் இவ் வேத நூ. தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன போலீஸ் வேவுதொழில் பார்க்கிருன். அவன் ஒரு பூணுரலை போட்டுக்கொண்டு, ஏதேனும் ஒரு நேரத்தில், கிரா போன் பெட்டி தியாகையர் கீர்த்தனைகள் சொல்வதுபோல் பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு ஐயர் ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்து கொண்டு, “நான் பிராமணன், நான் தண்ணிர் குடிப்பகை கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது’ என்று கை பேசுகிருன். மற்றாெருவன் தாசில்தார் வேலை பார்க்கிருை பஞ்சத்தினல் ஜனங்கள் சோறின்றி மடியும்போது, அந் தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும்பொருட்டு “பஞ்சமே கிடையாது, சரியானபடி தீர்வை வசூல் செய் லாம்” என்று ரிப்போட்டு எழுதி விடுகிருன், ஆறிலொ கடமைக்குமேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்ற பஞ்ச நாளில் அதுகூடக் கேட்பது பெருங் குற்றம். அங் னம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவ ஹிந்து தர்மத்துக்கு விரோதி. அதற்குமப்பால், உள்