பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

புளுசத்தை இல்லை யென்றெழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு சாஸ்திரி யார் என்று பெயர் வைத்துக்கொண்டு, ‘நான் கெளதம ரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்’ என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிருன். இப்படியே, வைசியத்தொழில் சூத்திரத் தொழில் என்ற கெளரவத் தொழில்கள் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத்தொழில்கள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்து விட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட் பங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக் கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும்.

வஜ்ரஸூசி உபநிஷத்து பின்வருமாறு :

ஞானமற்றவர்களுக்குத் துரஷணமாகவும், ஞானக் கண்ணுடையவருக்குப் பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தை உடைப்பதுமாகிய ‘வஜ்ரஸூசி’ என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்:

“பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்’ என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதான மானவன் என்று வேத வசனத்தைத் தழுவி ஸ்மிருதி களாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென் துே பரிசோதிக்கத்தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிரா உணன் என்று சொல்லிக்கொள்ளுகிருன். அங்ஙனம் பிரா ‘மணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத்தையா? “மப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம இனத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணனென்றால்