பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

யர், சூத்திரர் முதலிய மற்ற லெளகிக வர்ணங்களுக்கும் இதுபோலவே தக்கவாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ் விலக்கணங்கள் பொருந்தியவர்களே. அவ்வவ் வருணத்தினரென்று மதிக்கத்தக்கவர்கள். அந்த இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத்தொழில் செய்பவன். பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன், கடித்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னேர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களை யெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர். குத்திரர் ஆகமாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பா டுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக்: கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வந்: வேண்டுமானல், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண். டும். பொய் வகுப்புகளும் போலிப்பெருமைகளும் நசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.

19. நகரம்

(குறிப்பு: பாரதியார் பல துறைகளிலே, முக்கிய மாகக் கவிதைத் துறையிலே என்னென்ன புதுச் சோதனைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார் என் பதற்கு இக்கட்டுரை ஒர் எடுத்துக் காட்டு. வசன கவிதை பிரான்ஸ் நாட்டிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரமாகக் கையாளப்பட்டது. அமெரிக்காவில் வால்ட் விட்மான் இந்த முயற்சி யலே சிறந்த வெற்றி பெற்றிருக்கிரு.ர்.