பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

செய்வதே மேல் என்று மதிப்பதை நாம் இன்று அறிவோம். கைதிகளை அன்புடன் நடத்துதல், சிறைச்சாலையில் பல சீர்திருத்தம் செய்தல் என்றெல்லாம் சாதாரணமாக இக்காலத்தில் பேசப்படுகிறது. திறந்தவெளிச் சிறை, பயனுள்ள தொழில் கற்பித்தல்.இவற்றைப் பல இடங்களிலே பரிசோதனை செய்து பலனையும் கண்டுள்ளார்கள். து.ாக்குத் தண்டனையையே ஒழித்து விடவேண் டும் என்று பேசப்படுகிறது.

பாரதியார் இவற்றைப் பற்றியெல்லாம் நுணுகி ஆய்ந்து அக்காலத்திலேயே முற்போக் கான எண்ணங்களை “வழங்கியுள்ளார். பெண் களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றும் தெளிவாக எழுதியுள்ளார்.

மிகப் பல துறைகளிலே இவ்வாருன சீர் திருத்தமும், முற்போக்குமான சிந்தனைகளை அவர் கொண்டிருந்தார் என்பது அவருடைய மேதையையும், பரந்த உள்ளத்தையும் காட்டு கின்றது. பகைவனுக்கருள்வாய் என்று பாடிய கவிஞரல்லவா!?)

கைதி விஷயம்

கைதிகளை அன்புடன் நடத்த வேண்டும். அ களும் மனிதர்தானே? ஏன் குற்றம் செய்தார்களென் கோபிக்கிருயா? ஏதோ தெரியாமல் செய்திருப்பார்க தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா? நல்ல ஸஹ ஸ்த்திலே பழக்கப்படுத்தியிருந்தால் இந்த நிலைக்கு இது திருப்பார்களா? ஜன சமுஹத்திலே சிலரை நாக நிலைமைக்குக் கீழே அமிழ்த்துவைத்த குறை யாை