பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


117

சேர்ந்தது? இப்போதுகூட சிறுபிள்ளைகள் குற்றம் செய்தால் கடுர தண்டனை விதிப்பதில்லை. திருத்தக்கூடத்திலே போடுகிரு.ர்கள். அமெரிக்கா முதலிய நாகரீக தேசங்களில், கைதிகளுக்கு நாள்தோறும் அதிக லெளகர்யங்களும் கடிமையும் இரக்கமும் காட்டி வருகிறார்கள். பழைய காலத்தில் இங்கிலாந்திலும் நமது தேசத்திலும் பெரும் பாலும் எல்லாத் தேசங்களிலும் சொற்பக் குற்றங்களுக் கெல்லாம் மிகவும் க்ரூர தண்டனை விதித்து வந்தார்கள். இலேசான களவுக்கு ஒருவன் கையை வெட்டிவிடுவார்கள். இக்காலத்தில் எந்த தேசத்திலும் அப்படி நிஷ்டுரமான தண்டனை கிடையாது. விசேஷமாக, ராஜ்ய சம்பந்தமான குற்றங்கள் செய்து சிறைப்படுவோரை இங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸாமான்யக் கைதிகளை போல் நடத்துவதில்லை. பலவிதமான குற்றங்களுக்குத் தண்டனை குறைந்து வருகிறது. மேலும் புராதன ராஜ்யங்களிலே மதத் திருத்தம் ராஜ்யத் திருத்தம் முதலியவற்றை விரும்புதல் குற்றம் என்று நீதிக்காரர் பாவித்திருக்கும் பல த்ருஷ்டாந் உங்கள் உண்டு. இப்போது அப்படியில்லை. பெரும்பான்மை யான தேசங்களில் மேற்கண்ட திருத்தக்காரருக்கு ராஜ்யஸம்மானமும் உயர்ந்த பதவிகளும் கிடைக்கும். ஆனல், இக்காலத்திலே கூட சிலதேசங்களில் ராஜ்யத் திருத்தம், மதத்திருத்தம் முதலியவற்றை நீதிக்காரர் குற்றமென்று சொல்லாவிட்டாலும், சற்றே சினந்த முகத் துடன் நோக்குகிறார்கள். இப்படி நடப்போர் நீதி சாஸ்திரத்தின் ஆதார வலிமைகளை நன்முகத் தெரிந்து கொள்ளவில்லை.

தண்டனையின் கருத்து குற்றஞ் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் வேன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்

 rrt