பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121:

தராக விமர்சிக்கிறது. தராசுக் கடை என்பது பல விஷயங்களைக் குறித்து பாரதியார் தமது .கருத் தைக் கூறுவதற்குக் கையாண்ட உத்தியாகும்.

1908ஆம் ஆண்டில் தென்னுப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய சத்யாக்ரஹத்தைப் பாரதியார் கூர்ந்து கவனித்து வந்துள்ளார். அதைப்பற்றிப் புகழ்ச்சியாகவும் தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார். பிற்காலத்தில் காந்தி பஞ்சகம் என்ற கவிதையில், காந்தியை மஹாத்மா என்றும் தேச விடுதலைக்கு உகந்த உன்னதமான வழி கண்டுபிடித்தவரென்றும் புகழ்ந்துள்ளார்.

ஆனல் தமக்கு எது சரியல்ல என்று படுகிறதோ அதைப் பாரதியார் வெளியிடத் தயங்குவதில்லை. அடித்தவனைத் திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்லுவது பிழை என்று கூறிவிடுகிரு.ர்.

“பகைவனுக்கருள்வாய் என்று பாடியவரும் நமது கவிஞரே. “துஷ்டனைக்கூட நீ தண்டனை செய்துகொள். எனக்கு அதிலேஸ்ந்தோஷமில்லை” என்று சித்தக் கடலில் 1915 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதியன்று எழுதியிருக்கிரு.ர்.) தராசு சொல்லலாயிற்று :

“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.

“அவர் சொல்லுகிற ஸ்த்ய விரதம், அஹிம்ஸை, கடமை. மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள்-இவற்றை எல்லோரும் இயன்றவரை பழக வேண்டும். ஆனல் ஒருவன் என்ன அடிக்கும்போது நான் திருப்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் ழை.