பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


125

என்று பாடிய பாரதியார்...பாவம்! நினைத்தால் கண் கலங்குகிகிறது.

இக்கட்டுரையில் உடம்பை உறுதி செய் வதற்கு அவர் வழி சொல்லுகிரு.ர். ‘பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாத படி தடுக்கும் பெற்றாேர் தாமறியாமலே மக்களுக் குத் தீங்குசெய்கிரு.ர்கள்.” என்று எச்சரிக்கிரு.ர்.

இங்கு பாரதியார் நமது இளமைப் பருவத் தையே நினைத்து எழுதுகிறார் என்று தோன்று கிறது. அவர் தமது ஸ்வ சரிதையில் எழுதுகிறார்: ‘ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஒடியும்

ஆறுகுட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத் தேறியிறங்கியும்

என்னெ டொத்த சிறியர் இருப்பரால் வேண்டுதந்தை விதிப்பினுக் கஞ்சியான்

வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன் தூண்டு நூற்கணத் தோடு தனியணுய்த்

தோழமை பிறிதின்றி வருந்தினேன்” இவ்வாறு வருந்திப் பாடுகிரு.ர்.

ஆனல் பட்டினத்தடிகளைப் போலத் “தந்தை யாகிய பாதகனே’ என்று சொல்லவில்லை.

இளமையில் உடம்பை உறுதி செய்யாது விட்டு விட்டதை நினைந்து ஏக்கத்தோடு பாடு கிரு.ர்.

இக்கட்டுரையும் இளைஞர்களுக்கும், பெற் ருேர்களுக்கும் நல்ல எச்சரிக்கையாக அமைந் துள்ளது.)