பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


127

உணவு

இந்திரப்ரஸ்த நகரத்தின் கடைசி கூடித்திரிய அரசனை நருதிவிராஜனுடைய ஸேனதிபதிகளிலே சா மி ண் டராய் என்று ஒருவன் இருந்தான். வடபக்கத்து முஹம்மதிய அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்டமாத்திரத்தில் தடுக்க முண்டாகும்படி அவன் அத்தனை வீரமும் யுத்தத் திறமையும் கொண்டு விளங்கினன். அவனுடைய சரீர வலிமையை அக்காலத்தில் பாரததேச முழுதிலும் நிகரற்ற தாகக் கொண்டாடினர்கள். அவனுக்குச் சாமுண்டி உபா னையுண்டு. விரதங்கள், கண்விழிப்புக்கள், தியானங்கள், வயாயாமங்கள் இவற்றிலேயே த ன து காலமுழுதும் ஆழித்தான். அவன் உணவு கொள்ளும்போது, வீமனைப் யால் அளவில்லாத பசியுடன் உண்பான் என்று சந்தகவி பருதிவிராஜ் ராஸோ’ என்னும் தமது காவியத்திலே எழுதி பருக்கிறார். வீமனுடைய பெயர்களில் வ்ருகோதரன் என்பதொன்று. அதாவது, ஒ நாய் வயிறுடையவன் என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது. இக்காலத்திலே குறைவாக உண்ணு தல் நாகரீகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.

பெருந்தீனிக்காரன் என்றால் அவமதிப்புண்டாகிறது. கிர்ார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சில பிராமணர்த்தக்காரர்களைப் ப்ோல், சரியான பலமில்லாமல் உடம்பைக் கொழகொழ வ்ென்று வைத்துக்கொண்டு, நாக்கு ருசியை மாத்திரம் ாதிப் பெருந்தீனி தின்பவனைக் கண்டால் அவமதிப் உண்டாவது இயற்கையேயாம். சிங்கம் புலிகளைப் போல உல் வலிமையும் அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கனடால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது; சாதாரண மாகப் பயும் உண்டாகும், நானவிதமான விலையுயர்ந்த