பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

செய்யலாம். ஐரோப்பாவிலே ஐம்பது வயதுக்காரர் ஆடியோடி விளையாடுவதும், பந்தடிப்பதும், கூட்டங் கூடிக் குதிப்பதும் சாதாரணமாகப் பார்க்கலாம். நமது நாட்டுக் கல்வியாளர் சிலர் முப்பது வயதிற்கு முன்னமே தம்மைக் கிழவர்களாக பாவனை செய்து கொண்டு, ஜீவகளை யில்லாமல் ஸஞ்சரிக்கிறார்கள்.

பெரியமனுஷத் தன்மை

இன்னு மொரு தொல் லை. பெரியமனுஷத் தன்மைக்கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்ம வர்களில் சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதி வைத்து விட்டது. ஆகையால், சொற்பப் பணமுடையவன்கூட, தனக்கு ஜலம் கொண்டுகொடுக்க ஒராளும், குளிப்பாட்ட ஒராளும், தலே துவட்ட ஒராளும் வைத்துக்கொண்டு, பாயோடே கிடக்கும் கிழவியைப்போல் நடந்து கொள்ளு கிருன். மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும். வீட்டிலே அவன் பெரிய நவாப், கைகாலை அசைக்க மாட்டான். மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டி எடுத்துக்கொண்டு வரவேண்டு மால்ை அவன் போக மாட்டான்; பந்துக்களை ஏவுவான். வயதிலே சிறியவராக யிருந்தால் அவர்களை விலையடிமை போலே நடத்துவான். அற்பக்காரியங்களுக்கெல்லாம் ஒருவரை யொருவர் வேலையே.வி வதைக்கும் தொல்லை நமக் குள்ளே மிகவும் அதிகம்.

முடிவுரை எவனும் உடம்பை உழைப்பிலுைம், அசைவிலுைம் கறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிர முண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்