பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும் பயமும் அடை கின்றனவாதலே யாம்.

இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிற உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப் பின்மையும், பயமும், வெறுப்பும் கவலேயும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலந்தொட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாத போராட்டத்தால் ஏற்பட்ட பழக்கத் தவிர வேருென்றுமில்லை.

எல்லா வஸ்துக்களும், எல்லாக் குணங்களும் ஒன்றென் னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை நீக்கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய காலமுதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது. எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமா மனத்துள் அவற்றை அழுத்தாமல், வாயினல் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிரு.ர்கள்.

ஆயினும் பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும் ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டு. வர முடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.

“அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிே யெய்தி வாழலாம் என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம்: மூன்று பிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினுழ் அந்த அஞ்ஞானப் பிசாசையும் அதன் குட்டிகளாகி காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸரியம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுேை சித்தம் இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நாlை: குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடுவிட்டில் வைத்தா: அது மறுபடியும் அசுத்த உணவை விரும்பி வா2ே