பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அமிர்தம் தேடுதல்

(குறிப்பு : ஏதாவது ஒர் உன்னதமான குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைய ஓயாது முயற்சி செய்ய வேண்டும். இதற்கிடையே தேகம் நித்தியமில்லை; என்று வேண்டுமானலும் அழியும் என்ற எண்ணமே கூடாது. பிறப்பு ஏற்பட்டபோதே இறப்பும் உண்டு என்பது தெரிந்த உண்மை. இதை நினைத்துக்கொண்டு நாளைக் கழிக்கிறவன் வேடிக்கை மனிதனுக வீழ்கின்றான். உடம்பை எல்லா வகையாலும் உறுதி செய்துகொண்டு உன் குறிக்கோளுக்காகப் பாடுபடு. இதுவே முடிவில் இன்பம் பயக்கும். இதுவே அமுதமுமாகும் என்கிறார் கவிஞர்.)

‘காக்க நின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லை”

-தாயுமானவ

பல வருஷங்களின் முன்பே தெரு வழியாக பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.

‘துரங்கையிலே வாங்குகிற மூச்சு-அது

சுழிமாறிப் போனலும் போச்சு’

இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்: யோசனை உண்டாய்விட்டது. என்னடா இது இந்த உய இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தி நாம் என்ன பெருஞ்செய்கை தொடங்கி நிறைவே முடியும்? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச்செய்கிரு: அறிவே நமது வடிவமாக அமைத்திருக்கிருன். அக இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்ப கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போ