பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


147

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- தர்மிஷ்டர் உடம் ஆப் போற்ற வேண்டும். அது ஆத்மாவின் கோயில். pத்தியப் பொருள் அதனுள்ளே விளங்குகிறது.”

ஸ்வாமி விவேகானந்தர்:-"வலிமையுற, நோயின்றி நடம்பைக் காத்தல் அவசியம். உடம்பு மிகச் சிறந்த ருவி. அதனிலும் சிறந்தகருவி உன்னிடமில்லை. ஆதலால், இதை வலிதாக, நோயற்றதாக வைத்துக்கொள். உனது டம்பு எஃகைப்போல் வலியதென்று பாவனை செய்து கொள். மெலிந்தோருக்கு விடுதலை யில்லை; மெலிவை யெல்லாம் துரத்திவிடு. உடம்பு வலிதென்று அதனிடம் சால்லு. அறிவு வலிதென்று அறிவினிடம் சொல்லு: பன்னிடத்திலே நீ எல்லையற்ற திடமும் நம்பிக்கையும் காண்டிரு.’

‘மஹாலக்கம் என்ற பெளத்த நூல் சொல்லுகிறது : உடன் பிறந்தோரே! இரண்டுவித மிகையு மில்லா திருப்போனே விடுதலை பெறுவான். எப்போதும் காமாதி இன்பங்களை நாடுதல் ஒரு மிகை, இஃதிழிந்தது, சிறுமை, மிருகத்தன்மை, ஆபத்து. இந்த வழியிலே பாமரர் சல்லுகிறார்கள். மற்றாெரு மிகையாவது உடம்பை மிதமிஞ்சிய விரத முதலியவற்றால் வருந்தச் செய்தல். இது துன்பம்; இது வீண். புத்த பகவான் கூறியது, மேற் இறிய சந்துகளிரண்டினும் வேருன வழி; அது அறிவைத் இறப்பது; தெளிவு தருவது: விடுதலைக்கும் ஞானத்துக்கும் சிறைவுக்கும் வழி காட்டுவது.”

யோக ஸஅத்ரங்களின் ஆசிரியராகிய பதஞ்ஜலி சொல்லுகிறார்:-வ லி ைம க ளிலே மதியை நிறுத்தி மயமம் (ஆழ்ந்த தியானம்) செய்தால் யானையின் பலம் தலியன கை கூடும்."