பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28. ஜப்பான் தொழிற்கல்வி

12 பிப்ரவரி 1916 (குறிப்பு : ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்: கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று, தமிழ்த்தாய் தன்மக்களை நோக்கிக் கூறுவதாகப் பாரதியார் எழுதியுள்ளது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்திய நாட்டுப் பெண்கள், வெளிநாடு களுக்குச் சென்று புகழ்ப்ெற்றுத் திரும்பவேண்டும் என்று, கவிஞர் ஆசைப்படுகிறார்.

ஆசிய நாடுகளிலே, அனைவருடைய கருத்தை யும் கவர்ந்தது ஜப்பான் ஆகும். அந்த நாட்டினர் மேல் நாடுகளுக்குச் சென்று, பல கலைகளையும் கற்றுத் தேர்ந்து, பின் தமது நாட்டிற்குத் திரும்பி வந்து, தமதுநாட்டை மேலை நாடுகள் போலத் தொழில்வளம் சிறந்ததாகச் செய்யத் தீவிரமாக முனைந்தனர். உலகமே வியக்கும் வகையில் ஜப்பான் முன்னேற்றம் அடைந்து ஓங்கி நிற்கின்றது. பல தொழில்களில் மேலைநாடுகளையும் அது மிஞ்சியுள்ளது.

ஆகவே ஜப்பானுக்கு பாரதநாட்டு இளைஞர் கள் சென்று பயிற்சிபெற்று வரவேண்டும் என்று பாரதியார் விரும்புகின்றார். இதே விருப்பத்தை சுவாமி விவேகாநந்தரும் தெரிவுஜதுள்ளார். நமது நாடு இவ்வாறு சென்று முன்னேறுவதற் கான வழிகளை மேற்கொள்ள வேண்டியது அவசரத்திலும் அவசரம் என்று, கவிஞர் இக் கட்டுரைப் பகுதியில் கூறுகின்றார்.)

I. 5-.-10