பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும்-ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங் களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகை களாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளே ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில் களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிறகல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸ்மானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம்.

29. ஹிந்து மகம்மதிய ஒற்றுமை

8 ri 1916

(குறிப்பு : இத் தேதியில் சுதேசமித்திரனில் வெளியான “பல” என்ற கட்டுரையில், இது ஒரு பகுதியாகும். இந்துக்களும் இஸ்லாமியரும் பரஸ் பரம் அன்பு பூண்டு வாழவேண்டும் என்பதைப் பாரதியார் பல இடங்களில் வற்புறுத்திக் கூறுவதை நாம் காண்கிருேம். சிவாஜி தன் சைன்யத்தை நோக்கி உரைப்பதாக வரும் வீர வுணர்ச்சிமிக்க பாடலில், மகமதியருக்கு விரோத மாக வந்துள்ள வரிகளுக்கு, அவரே 1906 நவம்பர் 17 ஆம் தேதி, இந்தியா வாரஇதழில் எழுதியுள்ள விளக்கத்தை ஆழ்ந்து நோக்கவேண்டும்.